உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை செய்துள்ளார். கடந்த 4ஆம் தேதி, காஜல் என்ற பெண் தனது வீட்டின் அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். காஜலுக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நவம்பர் மாதம் திருமணம் நடக்கவிருந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.