கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் தடகள விளையாட்டு வீராங்கனை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இளம் தடகள வீராங்கனை, தனது பயிற்சியாளர்கள் உள்பட 62 பேர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இதுகுறித்து அவர்களிடம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.