மதுரை சிலார்ஷா நகர் அருகே ரயில் மோதியதில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மதுசூதன் ப்ராஜபதி (30), க்யானந்த பிரதாப் கௌத் (22) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது விபத்தா என்பது குறித்து சுலைமான் காவல்துறையினர் மற்றும் ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.