உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இரண்டு சிறுவர்கள் கழுத்தறுத்து கொல்லப்பட்டனர். உறவினர்களான பிரின்ஸ் (12) மற்றும் அபிஷேக் (14) ஆகியோரை நேற்று முன்தினம் (ஜன., 23) முதல் காணவில்லை. பெற்றோர், உறவினர்கள் தேடிவந்த நிலையில், போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் இருவரது சடலமும் கிடந்துள்ளது. உடல்களை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.