உலகம் முழுவதும் இன்று (பிப். 04) புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் புற்றுநோயால் ஏறத்தாழ 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024-ல் மட்டும் மார்பக புற்றுநோயால் 13 ஆயிரத்து 600 பேரும், கர்ப்பப்பை புற்றுநோயால் 7 ஆயிரத்து 900 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.