பொறியியல் கலந்தாய்வுக்கு 2,34,503 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பி.இ., பி.டெக் சேர்க்கை கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 7ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று (மே.23) மாலை 6 மணி நிலவரப்படி கடந்த 17 நாட்களில் பொறியியல் கலந்தாய்வுக்கு 2,34,503 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் 1,66,404 பேர் கட்டணம் செலுத்தியும், 1,23,315 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர்.