தென் கொரியாவில், 2 வாரங்களுக்கு முன் ஜெஜு ஏர் விமானம் வெடித்து சிதறி 179 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மலிவு விலையில் விமான சேவைகளை வழங்கி வந்த நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அந்நாட்டு மக்கள் இழக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த டிக்கெட்களை பலர் கேன்சல் செய்ததால், ஜெஜு ஏர் நிறுவனம் மட்டும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 3 மாதங்களில் 1,900 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.