பெங்களூரில் RCB கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். அவர்களில் கே.ஜி.எஃப் தாலுகாவில் உள்ள பதமகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சஹானா (19) என்ற இளம் பெண்ணும் ஒருவர். இவரின் மரணம் அந்தக் குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பொறியியல் பட்டம் முடித்த அந்த இளம் பெண் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வீரர்களை காண சென்றபோது இந்த விபரீதம் நடந்துள்ளது.