பாகிஸ்தான்: இஸ்லாமாபாத் அருகேயுள்ள மேல் சித்ரால் பகுதியில் வசிக்கும் 17 வயதான டிக்டாக் பிரபலம் சனா யூசுஃபை, 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பின்தொடர்கின்றனர். அண்மையில், அவருடைய வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார். சனாவுடன் சில நேரம் பேசிய அந்த நபர், திடீரென தனது கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சனாவை சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி சென்றதாக கூறப்படுகிறது. இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.