தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் விஸ்வநாத் கார்த்திகேய படகந்தி வரலாறு படைத்துள்ளார். பிரபலமான 7 சம்மிட்ஸ் சவாலை முடித்த இளைய இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது இளைய நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான மலையை ஏறி சாதனை படைத்துள்ளார். கடந்த மே 27 அன்று விஸ்வநாத் 8,848 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த நிலையில் 7 சிகரங்களை ஏறிய பெருமையை அடைந்தார்.