சத்தீஸ்கரில் 16 நக்சல்கள் காவல்துறையில் சரண்

68பார்த்தது
சத்தீஸ்கரில் 16 நக்சல்கள் காவல்துறையில் சரண்
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அடுத்த ஆண்டுக்குள் முழுவதுமாக ஒழித்து கட்டப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பெண்கள் உட்பட 16 நக்சல்கள் இன்று (ஜூன் 2) காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சரணடைந்ததன் மூலம், அந்த இடம் நக்சல் இல்லாத இடமாக மாறியுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி