உ.பி: பிதுனா கோட்வாலி பகுதியில் வசித்துவரும் 14 வயது சிறுமி தாத்தா, தந்தை மற்றும் மாமாவால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயில்லா சிறுமியின் தந்தை, மாமா மற்றும் தாத்தா ஆகியோர் கடந்த ஒரு வருடமாக பலாத்காரம் செய்துள்ளனர். அதனால், கர்ப்பமாகவும் ஆகியுள்ளார். இந்நிலையில், தந்தை, மாமா மற்றும் தாத்தா ஆகியோர் சேர்ந்து கொலை செய்ய சதி செய்ததால், சிறுமி அத்தை வீட்டுக்கு தப்பிச் சென்று போலீஸில் புகாரளித்துள்ளார்.