ராஜஸ்தான்: ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட முட்டைகோஸை சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தனது மாமா வயலில் விளைந்திருந்த முட்டைகோஸ் இலைகளை பறித்து சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் கழித்து குமட்டல் ஏற்பட்டது. இதையடுத்து, டிசம்பர் 18ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 24ஆம் தேதி உயிரிழந்தார். இத்துயரச் சம்பவம் சிறுமியின் குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.