தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 13,977 பணியிடங்கள் காலியாக உள்ளதால், கடுமையான பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த பதவிகளில் 22 சதவீதம் பட்டியல், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டேஷன் மாஸ்டர், காவலர், பாயிண்ட்ஸ்மேன், லோகோபைலட், சிக்னல் பிரிவு, கேட்மேன் போன்ற காலிப் பணியிடங்கள் தவிர, பாதுகாப்புத் துறையில் பல காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது 80,750 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.