சென்னை சிட்லப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு காப்பகம் ஒன்றில், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி குடும்ப வறுமை காரணமாக தங்கி பயின்று வந்தார். நேற்று சிறுமி தனியாக இருந்தபோது, விடுதியின் காவலாளி மேத்யூ (50) சிறுமியின் கால் எலும்புகளை உடைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். தற்போது சிறுமி அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் குற்றவாளி மேத்யூ கைது செய்யப்பட்டுள்ளார்.