உ.பி. மதுரா மாவட்டத்தில் செப்.19 அன்று 13 வயது சிறுமிக்கு, 3 சிறுவர்கள் போதை மருந்து கலந்த தண்ணீரை கொடுத்துள்ளனர். அதை குடித்த சிறுமி தலை சுற்றி மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து, சிறுமியை காரில் ஏற்றிச் சென்று காட்டு பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறுமியை ஒரு மேம்பாலத்தின் அருகே தள்ளி விட்டு, சிறுவர்கள் தப்பி சென்றுள்ளனர். தந்தை அளித்த புகாரின் பேரில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.