உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் அருகே தனது 13 வயது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், பெண்ணின் காதலன் சுமித் பட்வாலையும் போலீசார் கைது செய்துள்ளனர். கணவரை பிரிந்து வாழ்ந்த நிலையில், அந்த சிறுமி தாயுடன் இருந்துள்ளது. பின்னர், தந்தையுடன் வாழத் தொடங்கிய பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தனது தாயின் காதலனும் மற்றவர்களும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அதற்கு தனது தாயார் அனுமதித்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.