பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும், காளையார் கோயில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகள் உருவாக்கப்படும், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கன்னியாகுமரியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில், இன்று (ஜன.01) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.