108 வெளிநாடுகளில் 13 லட்சம் இந்தியர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். 2024ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் உயர்கல்வி பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை 13 லட்சமாக உள்ளது. கனடாவில் 4.27 லட்சம், அமெரிக்காவில் 3.37 லட்சம், சீனாவில் 8,580, உக்ரைனில் 2,510 பேர் உள்ளனர். வெளிநாட்டில் நடந்த வன்முறைத் தாக்குதலில் 7 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து, உடல்நலக் காரணங்களால் 124 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தெரிவித்தார்.