தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான வடக்கு மொசாம்பிக்கை தாக்கிய சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான சிடோவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 120-ஐ எட்டியுள்ளது. 868 பேர் காயமடைந்த நிலையில், 680,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிடோ சூறாவளி டிச., 15 அன்று கரையைக் கடந்தது, பலத்த புயல் மழையை ஏற்படுத்தியது. கபோ டெல்கடோ, நம்புலா மற்றும் நியாசா மாகாணங்களில் சூறாவளியின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. 140,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.