மக்களவையில் மேலும் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

59பார்த்தது
மக்களவையில் மேலும் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட்
மக்களவையில் நடந்த புகை குண்டு தாக்குதல் நடந்ததையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று மக்களவையில் 33 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் பல எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் எம்பி திருமாவளவன், மதிமுக எம்பி கணேச மூர்த்தி, திமுக எம்.பி தனுஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா சூலே, டிம்பிள் யாதவ் உள்ளிட்ட 12 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.