பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக RCB நிர்வாகம் அறிவித்துள்ளது. IPL கோப்பையை RCB அணி வென்றதை அடுத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது துரதிஷ்டவசமான நிகழ்வு RCB குடும்பத்தை வேதனையில் ஆழ்த்தியுள்ளது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.