இந்த ஆண்டு இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் பரபரப்பு முடிவை எடுத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 11 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்
ள காங்கிரஸ் தலைவர்கள் குழு ஒன்று தேர்தல் ஆணையத்தை சந்தித்து வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைக் காட்டிய பதிவுகளின் நகல்களை சமர்ப்பித்தது. இந்த செயல்பாட்டில், தேர்தல் ஆணையம் 11 லட்சம் போலி பெயர்களை நீக்கியதோடு, வாக்காளர் பட்டியலை திருத்தி அமைத்துள்ளது.