நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 முக்கிய பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து இன்று (டிச. 11) விலகினார்கள். அதன்படி, நாகை தொகுதி பொருளாளர் நாகராஜன், செய்தி தொடர்பாளர் அகமது, இளைஞரணி செயலாளர் பிரவின் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் 50க்கும் மேற்பட்ட தொண்டர்களும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அண்மை காலமாக நாதக-வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகுவது தொடர் கதையாகி வருகிறது.