பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்...

1056பார்த்தது
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்...
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்குவதோடு, கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் ஏழை, பணக்காரர் வேறுபாடு இல்லாமல் அனைவரும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பது தான் பொங்கல் பரிசு வழங்கப்படுவதன் நோக்கம். எனவே, பொங்கல் திருநாளையொட்டி அரசு அறிவித்துள்ள பரிசுத் தொகுப்புடன் குறைந்தபட்சமாக ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி