சைபர் குற்றவாளிகள் கடவுச்சொற்களை எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் அதனை கண்டறிந்து மோசடியை அரங்கேற்றி விடுகிறார்கள். செமாஃபோர் அறிக்கையின்படி, ஹேக்கர்கள் சமீபத்தில் 1,000 கோடி கடவுச்சொற்களை கசியவிட்டு, பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். வல்லுநர்கள் இந்த வழக்கை மிகப்பெரிய மோசடி என்று விவரிக்கிறார்கள். இந்த மோசடியானது நற்சான்றிதழ் திணிப்பு தாக்குதல்களின் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று செமாஃபோர் அறிக்கை கூறுகிறது.