இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும்
போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகவும், 908 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்தனர். 1,600க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாக பாலஸ்தீனிய ஊடகங்கள் தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே
போர் நீடித்து வருவதால்
போர் பதற்றம் நிலவி வருகிறது.