100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் ஊதியம் ரூ.319 ஆக உள்ளது. இதனை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 17 ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டதன் மூலம் ரூ. 319 ஆக இருந்த 100 நாள் வேலை திட்ட ஊதியம் தற்போது ரூ.336 ஆக அதிகரித்து வழங்கப்படும் என்றும், ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு 5.33 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.