தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஏழைகளுக்கு 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம் (96) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். மருத்துவரின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பட்டுக்கோட்டை அடுத்த சீனிவாசபுரத்தில் கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக 10 ரூபாய் மட்டும் கட்டணமாக பெற்றுக் கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார். அவரது மறைவு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.