வக்ஃபு வாரிய கூட்டுக்குழு கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே காரசார வாதம் நடந்த நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா, எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக நாடாளுமனற் நிலைக்குழுக்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், அதுகுறித்து ஆய்வு செய்துவருகின்றனர். இன்று நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.