தெலங்கானாவிலும் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரம் வரை உயர்த்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. தெலங்கானா அரசின் 'தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் துறையின்' முதன்மைச் செயலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் 10 மணி நேர வேலை என்ற உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தெலங்கானாவிலும் அதேபோன்ற ஒரு நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.