ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கத்தை மறக்க முடியுமா?
எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய், தனுஷ்-சிம்பு என நமது ஆதர்ச நாயகர்களின் படங்களை விசில் சத்தத்துடன் பார்த்த திரையரங்கம் தான் சென்னை வடபழனியில் இருந்த ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம். 2020-ல் மூடப்பட்ட ஏவிஎம் ராஜேஸ்வரி அரங்கத்தின் கடைசி காட்சியின் டிக்கெட் விலை 70 ரூபாய் தான். மிடில் க்ளாஸ் குடும்பத்தினருக்கு ஏற்ற திரையரங்கமாக இருந்த ஏவிஎம் ராஜேஸ்வரி ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்துள்ளது.