விளையாட்டு வீரர்கள் பபுள்கம் மெல்லுவதற்கான காரணம்
மைதானத்தில் பபுள் கம் மெல்லுவது வீரர்களின் கவனம் மற்றும் மூளைத்திறனை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. பபுள் கம் சாப்பிடும் போது சில ஹார்மோன்கள் தூண்டப்படுகிறது. குறிப்பாக செரடோனின் என்ற மன அமைதியை தூண்டும் ஹார்மோன் சுரக்கிறது. மேலும் வீரர்கள் அங்கும் இங்கும் ஓடுவதால் ஏற்படும் தாகத்தை ஈடுகட்ட பபுள் கம் வாயில் ஈரப்பதத்தை பராமரிக்கிறது. வாயில் உள்ள சுவை மற்றும் தாடை இயக்கம் மேம்படுவதால் மூளை செயற்பாடு தூண்டப்படுகிறது.