இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பிரித்த வாலிபர் கைது (வீடியோ)

கிருஷ்ணகிரி: ஜக்கப்பன் நகரில் பள்ளிக்கு சென்ற பேரக்குழந்தைகளை வழியனுப்பிவிட்டு திரும்பிய கலைச்செல்வி (48) என்பவரிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஸ்வர சுதர்சன குமார் (25) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பறிபோன 1.5 சவரன் சங்கிலியை போலீஸார் மீட்டனர்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி