"எந்த கட்டணமும் இல்லாமல் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம்" என புதிய வரைவு விதிகளை DGCA முன்மொழிந்தது. அதன்படி, “விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் பயணிகள், எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம்” என்ற புதிய வரைவு விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முன்மொழிந்தது. இதனால், பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை கட்டணம் செலுத்தாமல் இனி ரத்து செய்ய முடியும் என கூறப்படுகிறது.