மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் அபார வெற்றி பெற்றிருந்த இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதனால், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்குத் திரும்ப இந்தியா அணி இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.