விடுபட்டோருக்கும் மகளிர் உரிமைத் தொகை வரும் - உதயநிதி ஸ்டாலின்

விடுபட்டோருக்கும் மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் இன்று (நவ.3) நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், கூடுதலாக விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், அடுத்த மாதம் தகுதியானோருக்கு ரூ.1,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தற்போது, 1.20 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுவதோடு, மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி