உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், இளம் பெண்கள் லிவ்-இன் உறவுகளிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், தங்களை சுரண்டக்கூடிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் கூறியுள்ளார். லிவ்-இன் உறவுகளின் விளைவுகளை பார்க்க விரும்பினால், ஒருவர் அனாதை இல்லங்களுக்கு செல்ல வேண்டும் என்று கூறிய அவர், 'ஒரு வயது குழந்தையை வைத்திருக்கும் 15 முதல் 20 வயது சிறுமிகளை அங்கு காண்பீர்கள்" என்றார்.