மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘மதராஸி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ரூ.100 கோடி வசூலை கூட ஈட்டவில்லை. தற்போது, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மதராஸி’ படப்பிடிப்பின்போதே முருகதாஸ் கூறிய கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துவிட்டதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி