கேரளாவின் மலப்புரத்தில் காட்டு யானை ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது. வெத்திலப்பாறை பகுதியைச் சேர்ந்த சன்னி என்பவரது 25 அடி ஆழ கிணற்றில் இன்று (ஜன., 23) அதிகாலையில் யானை தவறி விழுந்தது. யானையை மீட்கும் முயற்சியில் வனத்துறை, தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் முதலுதவி அளிக்க வனத்துறை கால்நடை மருத்துவர்கள் குழுவும் விரைந்துள்ளது. இது குறித்து அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
நன்றி: Reporter Live