கோவையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடுவின் பெயர் வைக்கப்பட்டதற்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 'எதிலும் சாதி பெயர்கள் இருக்கக்கூடாது' என்று பேசி வந்த திமுக அரசு, தற்போது ஏன் ஜி.டி. நாயுடு என்ற சாதி பெயரை சூட்டியது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், அந்த மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடுவின் பெயரை நீக்கிவிட்டு, கொங்கு மக்களின் பெருமைகளாக திகழும் தீரன் சின்னமலை போன்றவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.