பள்ளி காலத்தில் திமுகவில் இணைந்த ஐ.பெரியசாமி, 1973-ம் ஆண்டு இடைத்தேர்தலில் MGR-ஐ வத்தலகுண்டுக்குள் நுழைய விடமாட்டேன் என கூறி கவனம் பெற்றார். அதன் பிறகு வத்தலகுண்டு ஒன்றிய தலைவரானார். 2021 தேர்தலில் வெற்றி பெற்று கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் உள்ளார். 2006-2011 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த அவர் வீட்டுவசதி வாரியத்தில் முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை இன்று (ஆக.16) அவரது வீட்டில் சோதனை நடத்திவருகிறது.
நன்றி:Polimer