அனிருத்துக்கு எப்போ திருமணம்.. அப்டேட் கொடுத்த அப்பா

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். சமீபத்தில் திரைக்கு வந்த 'கூலி' படத்தில் இடம் பெற்ற அவரது பாடல்கள் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், அனிருத்தின் திருமணம் எப்போது என்பது குறித்து அவரது தந்தை ரவிசந்தர் ராகவேந்தர் பேசியிருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் அனிருத்துக்கு எப்போது திருமணம்? என்று கேட்டபோது, "எனக்கே தெரியவில்லை. நான் உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன். உங்களுக்கு தெரிந்தால் கட்டாயம் சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.

நன்றி:NewsTamil24x7

தொடர்புடைய செய்தி