உழைப்பவர்களுக்கு துணை நிற்போம் - முதல்வர் ஸ்டாலின்

தூய்மை பணியாளர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து, அதன் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், ஜெயசங்கர் உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவு வெளியிட்ட முதலமைச்சர், "அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை தூய்மை பணியாளர்கள் முன்வைத்ததாகவும், அதையும் பரிசீலித்து நிறைவேற்றி கொடுப்போம்" என்றும் உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி