அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் இன்று (ஆக.16) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்ட அறிக்கையில், “அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக இருக்கிறது. EDக்கும் அஞ்சமாட்டோம், மோடிக்கும் அஞ்சமாட்டோம். சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றார்.