இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இந்தியாவுடன் மீண்டும் போர் வந்தால், முன்பை விட சிறந்த முடிவை அடைவோம்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில், இந்தியா பாகிஸ்தானுடன் கொண்டிருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும், வர்த்தக உறவையும் முறித்துக்கொண்டது.
நன்றி: தந்தி