ஹரியானாவில் 25 லட்சம் பேரின் வாக்குகள் திருடப்பட்டு இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “சஷாகிரி என்பவர் பதாஸ்பூர் என்ற இடத்தில் 14 முறை வாக்களித்திருக்கிறார். ஹரியானாவில் முகவரியே இல்லாமல் 93,000 வாக்காளர்கள் உள்ளனர். ஹரியானாவில் ஒரு தொகுதியில் ஒரே புகைப்படத்துடன் 100 பேருக்கு வாக்குரிமை உள்ளது. நோடல் என்ற தொகுதியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் மட்டும் 501 வாக்குகள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.