விருதுநகர் மாவட்டத்தில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது வரையிலும், இதர வகுப்பினருக்கு 40 வயது வரையிலும் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.