காரியாபட்டி அருகே உவர்குளம் கிராமத்தில், கருணாகரனின் கிணற்றிலிருந்து செந்தாமரைக் கண்ணன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சியதில் ஏற்பட்ட தகராறில், கருணாகரன் செந்தாமரைக் கண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மது அருந்தும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், செந்தாமரைக் கண்ணன் கருணாகரனின் குடும்பத்தை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. கத்திக்குத்து காயங்களுடன் தப்பி ஓடிய செந்தாமரைக் கண்ணன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். போலீசார், கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.