ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் செண்பக தோப்பு பேயனாறு நீராதாரம் மற்றும் தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறையோ குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் குடிநீர் விநியோகம் தாமதமானதால் மக்கள் சிரமப்பட்டனர். தற்போதைய மழைக்காலத்தில் ஒரு வார இடைவெளியில் குடிநீர் வழங்கப்பட்டாலும், நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகிறது. இந்தப் பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்தாலும், தற்காலிக சீரமைப்புகள் மட்டுமே செய்யப்படுகின்றன. நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.